நாயும், கிளியும்!!

Posted by Esha Tips on Friday, March 24, 2006

ஒரு ஊர் ஒன்று இருந்துது. அந்த ஊருக்குப் பேர், 'ஊ ஊ'. ஏனந்தப் பேர் எண்டால், அங்கே எப்பவும் சரியான காத்து.... ஊ ஊ என்று சத்தம். அங்கே கன வீடுகள் இருந்தது. அதுல ஒரு வீட்டில், ஒரு பறவை இருந்தது. அது கதைக்கும். அது கிளியாக இருக்கலாம். பக்கத்து வீட்டில் ஒரு நாய் இருந்தது. அங்கே வேறு வீடுகளில் வேறு நிறைய மிருகங்களும் இருந்தது.

அந்த நாய்க்கு வெளியில போய் splash splash அடித்து தண்ணியில் விளையாட நல்ல விருப்பம். மழை பெய்தால் வெளியில விளையாடப் போய் விடுவார். மற்றவைக்கு விருப்பமில்லை. அந்த இடத்துல நெடுக மழை பெய்யுறதால அவை வேறு எங்கையாவது ஊருக்குப் போகலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தார்கள்.

ஒருநாள் நல்ல மழை. மரமெல்லாம் முறிந்து வீட்டுக்கு முன்னுக்கு விழுந்திருந்தது. மழையில நிறைய தண்ணி, (அப்பா கேட்கிறார்... வெள்ளமா அஞ்சலி?), வெள்ளம்தான் வந்திருந்தது. மரம் இருந்ததால வெள்ளம் வீட்டுக்குள்ளே வரவில்லை. அந்த நாய்க்கு நல்ல சந்தோஷம். வெளியில் போய் நல்லா விளையாடி, தண்ணியில நீந்தி நீந்தி விளையாடி, மரத்தையும் இழுத்துக் கொண்டு போய்விட்டார். அதனால் வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணி வந்து விட்டது. அப்போ எல்லாம் மிருகங்களுக்கும் சரியான கோபம் வந்தது. கிளி சொன்னது நாங்கள் இவரை வெளியில கலைச்சு விடுவம், இவர் இங்க வரக்கூடாது என்றது. எல்லோரும் ஓமென்று சொல்லி நாயை கலைத்து விட்டார்கள்.

நாய்க்கு நல்ல சந்தோஷம். அவர் வெளியில நின்று, நிறைய நேரமா விளையாடினார். 3 நாள் போனதும், அவருக்கு சரியான கஷ்டமா போச்சுது. சரியான குளிரும். அப்ப அவர் திரும்பி வீட்டுல வந்து கேட்டார், என்னை வீட்டுல விடுங்கோ, நான் இனி குழப்படி செய்ய மாட்டன் என்று. அவையளும் சரியென்று சொல்லி, வீட்டுக்குள்ளே விட்டார்கள். அதன் பிறகு நாய் குழப்படி விடாமல் அவர்களுடன் சேர்ந்து இருந்தார். எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.


Nama Anda
New Johny WussUpdated: Friday, March 24, 2006

0 comments:

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Powered by Blogger.

Popular Posts

CB